சற்று முன்னர் முகநுால் நிறுவனம் வெளியிட்ட அதிரடி முடிவு – குவியும் பாராட்டுக்கள்

இன்றைய நவீன காலத்தில் சமூக வலைத்தளங்களின் தேவை முக்கிய பங்காக உள்ளது எனினும் இந்த சமூகத்தளங்கள் ஐ பயன்படுத்தி பலர்
பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். 
சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் நிறுவனமாகிய முகநூல் நிறுவனம் இவ்வாறு பரப்பப்படும்  வதந்திகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இது குறித்து முகநுால் நிறுவனம் ” பொய் செய்திகளை பரப்பி தமது இணையத்தள விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுபவர்களின் பக்கங்களை நிறுத்துவதன் மூலம் வதந்திகளை கட்டுப்படுத்த முடியும் ” என தெரிவித்துள்ளது.
இதே போல மற்றொரு நபர் கூறிய கருத்துக்களை திரும்ப திரும்ப பதிவு செய்பவர்களுக்கும் விளம்பரம் தடை  செய்யப்படும் எனவும்  கூறியுள்ளது.
முகநுால் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன