தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்த முகநூல் நிறுவனம்

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகநூல் பக்கத்தை (Facebook Page) முகநூல் நிறுவனம் உத்தியோகபூர்வ பக்கமாக அங்கீகரித்துள்ளது.

இலங்கையின் அரசியற் கட்சிகளின் வரலாற்றில் முகநூல் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது அரசியல் கட்சியின் முகநூல் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முகநூல் பக்கமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முகநூல் பக்கங்கள் மாத்திமே இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட முகநூல் பக்கங்களாக செயற்பட்டு வந்தன.

இலங்கையில் மூன்றாவது அரசியல் கட்சியாக தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகநூல் பக்கத்திற்கு தமது அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது முகநூல் நிறுவனம்.