கலைகட்டும் ஐ.பி.எல். திருவிழா!!!

இந்தியாவில்  ஆரம்பமாகவுள்ள ஐ.பி.ல் தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலாமாக நடைபெற்று வருகின்றது.

2018ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் தொடக்க விழா  மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி, சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள முதல் போட்டியின் நாணய சுழற்சிக்கு 15 நிமிடங்கள் இருக்கும் வரை ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த ஆரம்ப நிகழ்வில் பொலிவூட்டின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு நடனம், பாடல் மற்றும் இசை என சகல விதங்களிலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளனர்.

இந்த ஆரம்ப நிகழ்வில் முன்னணி பொலிவூட் நட்சத்திரங்களான வருன் தவான், பிரபுதேவா, ஹிரித்திக் ரோஷன், ஜெக்கலின் பெர்னாண்டஸ் மற்றும் தமன்னா பாஹ்டியா ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளதுடன், பாடகர் மிகா சிங்கும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இந்நிலையில்  ஆரம்பமாகவுள்ள தொடக்க விழாவுக்கான ஒத்திகைகள்  இடம்பெற்று வருகின்றன.

இதில் பொலிவூட் நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளதுடன், நூற்றுக்கணக்கான உதவி நடிகர்கள், நடனமாடுபவர்கள் மற்றும் வெவ்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றுபவர்கள் மைதானத்தில் கூடியுள்ளனர்.