தரவரிசையில் இலங்கையை முந்தியது ஆப்கானிஸ்தான்

ஐ.சி.சி. T20 தரவரிசை பட்டியலில் இலங்கை அணியை 8 ஆவது இடத்தில் இருந்து 9 ஆவது இடத்துக்கு பின் தள்ளி அப்கானிஸ்தான் அணி முன்னேறியுள்ளது. இலங்கை அணி விளையாடிய கடந்த கால போட்டியில் பல போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தமையே இந்த பின்னடைவுக்கு காரணம். ஐ.சி.சி. இன்று T20 தரவரிசை பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் பாகிஸ்தான் அணி 130 புள்ளிகளை பெற்று 1 ஆம் இடத்திலும், 126 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா அணியும், 123 புள்ளிகளுடன் இந்திய அணியும் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது.

iv

மேலும், 4 ஆவது இடத்தில் 116 புள்ளியுடன் நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து 115, தென் ஆபிரிக்கா 114, மேற்கிந்திய தீவுகள் அணி 114, அப்கானிஸ்தான் 87, இலங்கை, 85 புள்ளிகளுடனும் 10 ஆவது இடத்தில் பங்களாதேஷ் அணி 75 புள்ளிகளுடனும் உள்ளது. மேலும் நேற்றைய தினம் வெளியான டெஸ்ட் தரவரிசையில் இந்தியா அணி முதலிடத்தையும், இலங்கை அணி 6 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Please follow and like us: