கிளிநொச்சிபகுதி விவசாயிகளை நேரில் சென்று சந்தித்த அதிகாரிகள் – Photos

கிளிநொச்சிபகுதி விவசாயிகளை நேரில் சென்று சந்தித்த அதிகாரிகள்

vivv

இணையத்தளங்களில் அதிகளவிலான வாசகர்களினால் படிக்கப்பட்ட செய்திகள் இந்த பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. படிக்க தவறாதீர்கள்.

கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளை வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் உயரதிகாரிகள் நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளனர். வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் ஜனனி உள்ளிட்ட கள செயற்பாட்டு உத்தியோகத்தர்கள் இவ்வாறு கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

malail

கள செயற்பாட்டு உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர், பழ பயிர்களுக்கான பாடவிதான உத்தியோகத்தர் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர். இதன்போது, கிளிநொச்சி பெரிய பரந்தன், குமாரபுரம் போன்ற மேலும் பல விவசாய பகுதிகளுக்கு குறித்த அதிகாரிகள் விஜயம் செய்துள்ளனர்.

வடக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தினால் அப்பகுதி மக்களுக்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்றிட்டங்கள் தொடர்பில் தெளிவூட்டும் நோக்குடன் இந்த கள விஜயம் மேற்கொள்ளப்பட்டுவருவதாக விவசாய போதனாசிரியர் ஜனனி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து இயங்கும் கிளிநொச்சி செய்திகள் இணையத்தளம் கிளிநொச்சி உட்பட வடக்கு மகாணத்தில் 120 ஆயிரத்திற்கும் அதிக வாசகர்களை கொண்டுள்ளது. எமது இணையத்தளத்தில் விளம்பரங்கள் செய்ய அழையுங்கள் – 076 10 36 295

vivvv

குறித்த செயற்றிட்டத்தில், அன்னாசி, மாமரம், சிறுதானியம் உள்ளிட்ட பிற பயிர் செய்கை தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வன்னி மலர்கார்டினுக்குச் சென்ற அதிகாரிகள் அன்னாசி, அவுஸ்திரேலிய தரத்திலான மாமரங்கள் பார்வையிட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் அவற்றின் விரிவாக்கம் குறித்து அதன் உரிமையாளருடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.