இலங்கை கிரிக்கெட் சபை சங்ககார வசமாக சாத்தியம்; இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழருக்கு வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் சபை சங்ககார வசமாக சாத்தியம்; இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழருக்கு வாய்ப்பு?

sanga

இணையத்தளங்களில் அதிகளவிலான வாசகர்களினால் படிக்கப்பட்ட செய்திகள் இந்த பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. படிக்க தவறாதீர்கள்

இலங்கை கிரிக்கெட் சபையை இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரவிடம் ஒப்படைக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இது சாத்தியமானால் தமிழ் இளைஞர்கள் இலங்கை கிரிக்கெட் அணிக்குள் நுழைய வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று (31.05.2018) கூடிய ஐ.தே.கவின் மத்திய செயற்குழுவிலேயே இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அல்லது அமைச்சரவையில் முன்மொழிவதற்கும் இதன்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கைக் கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோரின் நிர்வாகத்தின்கீழ் இலங்கைக் கிரிக்கெட் சபை பெரும் சீரழிவை எதிர்கொண்டிருக்கின்றது என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

malail

இந்த தீர்மானத்தின் படி இனம், மதம் பார்க்காத மனித நேயமுள்ள சங்ககாரவிடம் இலங்கைக் கிரிக்கெட் சபை ஒப்படைக்க பட்டால் திறமையான தமிழ் இளைஞர்கள் இலங்கை கிரிக்கெட் அணிக்குள் நுழைய வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் இருந்து இயங்கும் கிளிநொச்சி செய்திகள் இணையத்தளம் கிளிநொச்சி உட்பட வடக்கு மகாணத்தில் 120 ஆயிரத்திற்கும் அதிக வாசகர்களை கொண்டுள்ளது. எமது இணையத்தளத்தில் விளம்பரங்கள் செய்ய அழையுங்கள் – 076 10 36 295