இலங்கைக்கு மேலும் 277 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

மேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 277 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

sril

கிளிநொச்சி உட்பட வடக்கு மாகாணத்தில் இலட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட எமது கிளிநொச்சி செய்திகள் இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய அழையுங்கள் – 076 10 36 295

நாணயசுழற்சியை ​வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 8 விக்கட்டுக்கு 414 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது. இதில் டாவ்ரிச் 125 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

malail

இலங்கை அணி தரப்பில் லஹிரு குமார 4 விக்கட்டுக்களையும், சுரங்க லக்மால் 2 விக்கட்டையிம் வீழ்த்தினர். இதையடுத்து போட்டியை தொடங்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ஓட்டங்களளளுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கட்டுக்களையும், கீமர் ரோச், காப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி தமது இரண்டாவது இன்னிங்சில் 72 ஓவரில் 7 விக்கட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இந்த போட்டியில் இலங்கை அணி தரப்பில் லஹிரு குமார 3 விக்கட்டுக்களையும், ரங்கன ஹேரத் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

ldi

இலங்கை அணி வெற்றி பெற 453 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் போட்டியை தொடங்கிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கட் இழப்புக்கு 176 ஓட்டங்களை எடுத்துள்ளது.

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் ஆடடமிழக்காமல் 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார். எனவே போட்டியின் இறுதி நாளான இன்று இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின் 277 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.