கிளிநொச்சியில் கதறி அழுது மயங்கி வீழ்ந்த தாய்!! நடந்தது என்ன??

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 500வது நாளை எட்டியுள்ளது.

kilinochchinews

இந்நிலையில், வடக்கு, கிழக்கை சேர்ந்த 8 மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது காணாமல் போன தனது பிள்ளையை தேடித்தருமாற கோரி கதறி அழுத தாய் ஒருவர் மயங்கி வீழ்ந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் எவ்வித தீர்வும் இன்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.