அரசாங்க சட்டங்களால் தொழில் பாதிப்பு: பனை-தென்னை கூட்டுறவு சங்கத்தினர் விசனம்

தொழில் பாதிப்பு

1

அரசாங்க சட்டங்களால் தமது தொழில் பாதிக்கப்படுவதாக பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த பனை- தென்னை கூட்டுறவு சங்க அங்கத்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் தெரிவித்துள்ளார்கள்.

kallu

நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பச்சிலைப்பள்ளி பிரதேச அரசியற் பணிமனையில் உற்பத்தியாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைவர் சு.சுரேன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே கூட்டுறவு சங்க அங்கத்தவர்கள் மேற்கண்டவாறு விசனம் வெளியிட்டுள்ளனர்.