நாச்சிக்குடா வான்பரப்பில் நிகழ்ந்த அதிசயம்; இளைஞனுக்கு நேர்ந்த கதி!- நடந்தது இதுதானாம்..

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பிரதேசத்தில் கிருஷ்ணர் வானத்தில் தோன்றி அருளாட்சி புரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கிறிஸ்தவ வாலிபன் நாச்சிக்குடா கடற்கரையில் இரவு மீன் பிடிக்க செல்வதற்காக வலைகளை உலர வைக்க சென்றிருக்கிறார்.

அப்போது அந்த வாலிபன் வானத்திலே கிருஷ்ணர் அவதாரம் தோன்றியிருந்ததை அவதானித்ததோடு, உடனே தனது கைத்தொலைபேசியை எடுத்து அதை புகைப்படம் எடுத்திருக்கிறார். குறித்த புகைப்படத்தை அவர்களின் ஊர் கிறிஸ்தவ பங்குத்தந்தையிடம் காட்டியிருக்கிறான் அப்போது தான் அவனுக்கு தெரிந்திருக்கிறது, அவன் படபிடித்தது கிருஷ்ணரின் உருவத்தை என்று.

nachi

இதே போல் இதே கிருஷ்ணர் உருவத்தை கடல் பகுதியில் நின்றிருந்த பிறிதொரு நபரும் அவதானித்திருக்கிறார்.

அவர் கிருஷ்ணணின் உருவத்தை வானில் கண்ட அதிர்ச்சியில் மயக்கமடைந்து வீழ்ந்திருக்கிறார் பின் அந்த இடத்தால் வந்த கடற்படையினர் அவரை மீட்டு நினைவு தெளிய வைத்த பின் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். இந்த விடயம் தற்போது பூநகரி பிரதேத்தில் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏன் இப்படி திடீரென கிருஷ்ணபகவான் அருளாட்சி புரிந்தார் என்ற செய்தி அப்பகுதி மக்களிடம் பலதரப்பட்ட கேள்விகளை உருவாக்கி உள்ளது.