பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை ; அரசாணை வெளியிட்டது அரசு.!

பிளாஸ்டிக் பொருட்கள்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை குறித்து சட்டப்பேரவையில் இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1

தமிழகத்தில் வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வா் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா். இது தொடா்பான அரசாணை தமிழக அரசு சாா்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பால் மற்றும் பால் பொருள்களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள், தோட்டக்கலை மற்றும் வனத்துறை மூலம் மரங்கள் வளா்ப்பதற்கு அரசு உத்தரவின் அடிப்படையில் பிளாஸ்டிக் பயன்படுத்தலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

plastic

மேலும், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள்கள், உற்பத்தி நிறுவனத்தில் இருந்து பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் இதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டிற்கு தடை விதித்த அரசின் நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் பெரும் அளவில் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.