உங்க ராசிய சொல்லுங்க? உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்

தொழில்கள்

jobs

ஜோதிடப்படி ஒவ்வொரு ராசிக்கும் பொருத்தமான தொழில்கள் என உள்ளது. உங்கள் ராசிக்கு பொருத்தமான தொழிலை தேர்வு செய்து தொடங்குவீர்களாயின், நீங்கள் வெகு சீக்கிரத்திலேயே அத்தொழிலில் வெற்றி பெறமுடியும்.

meshamjpg

மேஷம் ,ரிஷபம் பத்திரிக்கை, கணிதவியல், மருந்துக்கடை, சுரங்கம், மருத்துவர், பொறியாளார், விளையாட்டு, வாகனம், ரேடியோ ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொட்டும்.

midhunamjpg

மிதுனம் மிதுனராசிகாரர்கள், எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும், நீதி நேர்மையுடன் செயல்பட்டு லாபத்தை அடைவார்கள். பேங்க், வட்டி கடை, நகை வியாபாரம், ஆசிரியர் பணி, வக்கீல் பணி, அரசு தொடர்புடைய நிறுவனங்கள் போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட், பால், நெய், வெண்ணெய் ஏற்றுமதி போன்றவற்றிலும் லாபம் கிட்டும்.

kadagamjpg

கடகம் கடக ராசிக்காரர்கள் துணி சம்பந்தமான தொழில் செய்தால் நல்ல லாபம் பெறலாம். இவர்கள் உத்தியோகம் மற்றும் தொழில் முன்னேற்றமடைந்த நபராக இருப்பார். இவர்கள் மானசீகமாக பணியாற்றுபவர். கலையார்வம் மிக்க பணிகளில் ஆர்வம் கொண்டவர். உணவு தயாரித்தல், வாசனைப் பொருட்கள் தயாரித்தல், கலைப் பொருட்கள், திரவம், புகைப்படம் ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொட்டும். இவர்கள் எப்போதும் எதிர்காலத்தின் மீது கவலை கொள்பவராக இருப்பார். பெரிய பணிகளை எளிதாக செய்து முடிப்பர்.

simmamjpg

சிம்மம் சிம்ம ராசிக்காரர்கள் எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி அடைவது நிச்சயம். கனிமம் மற்றும் கல் தொடர்பான வேலைகளில் இவர்கள் லாபம் அடையலாம். தனது விருப்பத்தையும், தொழிலையும் தனித்தனியாக வைத்திருப்பர். விளையாட்டு இவர்களுக்கு பிடிக்கும். இவர்கள் வழக்கறிஞராக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

kannijpg-2

கன்னி இவர்கள் சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். சவால்களையும், போராட்டங்களையும் ரசித்து எதிர்கொள்ளும் மனப்போக்கு கொண்டவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவதால் தொழிலில் இவர்கள் விருத்தி அடைவார்கள். தெளிவாக முடிவை எடுக்கவல்லவர்கள்.

thulaamjpg

துலாம் துலாம் ராசிக்காரர்கள் சிறந்த வியாபாரியாக இருப்பர். இரும்பு, தங்கம் போன்ற வியாபாரங்கள் சிறப்பாக இருக்கும். துணி தொடர்பான வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

viruchigamjpg

விருச்சகம் விருட்சிக ராசிக்காரர்கள் புதிதாக கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். மருத்துவம், மின்சார பொருட்கள் விற்பனை, மின்சாரம் தொடர்பான வேலை, ரசாயனம் தொடர்பான வேலைகள் செய்வது உகந்தது. வெளிநாட்டு வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதியில் இவர்களுக்கு நிச்சயமாக சிறப்பான லாபம் கிடைக்கும்.

dhanusujpg

தனுசு சுய தொழில் செய்வது உத்தமம். கூட்டாளியாகவும் செயல்படலாம். தனது ஆசைப்படி தொழில் செய்யலாம். எதிலும் அதிக லாபம் கிட்டும். எப்போதும் வேலை வேலை என்று இருப்பார். துணி, விளையாட்டு சாமான்கள் தயாரிப்பு தொழிலில் லாபம் அடைவர். ஏதாவது ஒரு தொழிலை தேர்வு செய்து அதில் நிலையாக இருப்பது நல்லது.

makaramjpg

மகரம் வழக்கறிஞர், உணவு சம்பந்தமான தொழில், நிலக்கரி, சுரங்கம் போன்றவைகளில் நல்ல லாபம் கிட்டும். இந்த ராசிக்காரர்கள் நல்ல வழக்கறிஞராக செயல்படுவார்.

kumbamjpg

கும்பம் கும்ப ராசிக்காரர்கள் ஜாதகப்படி வியாபாரத்தில் அதிக நாட்டமுடையவர்களாக இருப்பர். இவர்கள் வணிகம் மற்றும் தொலைக்காட்சி தொடர்பான வேலைகளில் ஈடுபட்டால் அதிக லாபம் பெறலாம். இந்த ராசிதாரர்கள் சினிமா துறையிலும் பெரிய புகழை அடைவர்.

meenamjpg

மீனம் மீன ராசிக்காரர்களுக்கு வேலை செய்வதில் அதிக ஆர்வம் இருக்கும். இவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவது சிறந்தது. புதிய ஆடை வடிவமைப்பு, சங்கீதம் தொடர்பான பணிகளில் ஈடுபடலாம்.