ஏ-9 வீதியால் பயணிப்போருக்கு காத்திருக்கும் ஆபத்து! – Share

ஏ-9 வீதி

an

ஏ-9 வீதியால் பயணிப்போருக்கு காத்திருக்கும் ஆபத்து! – Share – Share with Your Friends on Facebook.

ஏ9 வீதியில் பயணிப்பவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு சான்றாக ஏ9 வீதியில் இன்றும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

ldi

(28.07.2018) மாலை 5.30 மணியளவில் வீதிக்கு வந்த யானை சுமார் 15 நிமிடங்கள் அப்பகுதியில் நடமாடிவிட்டு பின்னர் காட்டுக்குள் சென்றுள்ளது.

ann

தந்தங்களையுடைய யானை தனித்து வீதிக்கு வந்தமையால் அச்சமடைந்த பயணிகள் தமது வாகனங்களை திருப்பி வந்த திசை நோக்கிச் சென்றனர். சிலர் தூரத்தில் விலகி நின்றனர்.

யானை தானாக அவ்விடத்தில் இருந்து நகர்ந்து காட்டுக்குள் சென்ற பின்னர் பயணிகள் தமது பயணத்தை தொடர்ந்தனர்.

malail

அண்மைக்காலமாக கொக்காவில் பகுதியில் அடிக்கடி யானை வீதிக்கு வருகின்றமையால், இப்பகுதியால் செல்லும் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.