பொதுக்குழு மூலம் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்

ஸ்டாலின்

stalin

பொதுக்குழு மூலம் தலைவர் ஆகிறார் ஸ்டாலின் – பொதுக்குழு மூலம் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்

கருணாநிதி மறைந்து விட்டதால், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை, தலைவர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற பேச்சு, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கிளம்பி இருக்கிறது.

KARUNA

இதையடுத்து, ஆக.19ல், தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னையில் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம், கட்சி தலைவராக ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் துவங்கி உள்ளன.

ldi

முறைப்படி ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதற்கான எல்லா விஷயங்களையும், முதன்மை செயலராக இருக்கும் துரைமுருகன் செய்யத் துவங்கி விட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

பொதுச் செயலராக நீண்ட நாட்களாக இருந்து வரும் அன்பழகனையும், வயது முதிர்வு காரணமாக, அப்பொறுப்பில் இருந்து விடுவித்துவிடலாம் என்ற யோசனைக்கும் ஸ்டாலின் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

malail

அப்படி நடந்தால், பொதுச் செயலர் பொறுப்பில் மூத்த தலைவர் துரைமுருகனை அமர்த்தும் யோசனையிலும் ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Please follow and like us: