இந்த வார ராசிபலன் ஆகஸ்ட் 11 முதல் 18 வரை மேஷம் முதல் மீனம் வரை

மேஷம்

meshamjpg

செவ்வாய், கேது சேர்க்கை தொடர்வதால் சில தடுமாற்றங்கள் இருக்கும். சொந்தபந்தங்களின் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுக்கிரன் நீசமாக இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே சில மனவருத்தங்கள் வரலாம். அவசரத் தேவைக்காக பணம் பிரட்ட வேண்டிய சூழ்நிலைகள் வரும். குருவின் பார்வை காரணமாக எதையும் சமாளித்து விடுவீர்கள். புதன் 4ல் இருப்பதால் கல்வி வகையில் செலவுகள் வரும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். கர்ப்பமாக இருப்பவர்கள் கவனத்துடன் இருப்பது அவசியம். இடமாற்றத்திற்கான கால நேரம் உள்ளது. வெளி மாநிலங்களிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வருவீர்கள்.

ரிஷபம்

rishabamjpg

சுக்கிரன் நீசமாக இருப்பதால் மன அமைதி குறையும். எதையாவது நினைத்து மனக்குழப்பம் அடைவீர்கள். தாயாரின் உடல்நலம் காரணமாக மருத்துவ செலவுகள் ஏற்படும். கன்னிப் பெண்கள் பெற்றோர்களின் பேச்சைக் கேட்பது மிக மிக அவசியம். புதன் ராகுவுடன் இருப்பதால் வரவு செலவு என இருக்கும். மகளிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். செவ்வாய், கேது சேர்க்கை காரணமாக அலைச்சல் இருக்கும். நண்பர்களின் மூலம் சில பிரச்னைகள் வரலாம். சுப விஷயமாக திடீர் பயணங்கள் இருக்கும். விளையாட்டு, உடற்பயிற்சி, தடகளப் பயிற்சி போன்றவற்றில் பயிற்சியின் போது நிதானம், கவனம் தேவை.

மிதுனம்

midhunamjpg

சூரியன், புதன் சேர்க்கை காரணமாக உற்சாகமாகவும், சமயோஜிதமாகவும் செயல்படுவீர்கள். மாமன் வகை உறவுகளால் மகிழ்ச்சி, ஆதாயம் வரும். வழக்கு சம்பந்தமாக இருந்த தடைகள் நீங்கும். சுக்கிரன் நீசமாக இருப்பதால் பேரன் பேத்திகளால் செலவுகள் இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசனை செய்வீர்கள். வண்டி வகையில் செலவுகள் இருக்கும். குருவின் பார்வையால் கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. மகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும் செய்தி கிடைக்கும். உத்யோகத்தில் சில மனவருத்தங்கள் வந்து நீங்கும். தொழில் சீராக இருக்கும். பாக்கிகள் வசூல் ஆவதில் தாமதம் ஏற்படும்.

கடகம்

kadagamjpg

சாதக, பாதகங்கள், நிறை, குறைகள் உள்ள வாரம். சூரியன் ராசியில் இருப்பதால் அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். சனி 6ல் வக்கிரமாக இருப்பதால் ஒரு வேலையை முடிக்க அதிக முயற்சி தேவைப்படும். நண்பர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். புதன் ராசியில் இருப்பதால் உங்கள் திறமைகள் வெளிப்படும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். உயர் பதவியில் இருக்கும் உறவினர் உதவுவார். மருந்து, மாத்திரை வகையில் உண்டான செலவுகள் குறையும். தடைபட்டு வந்த குலதெய்வ தரிசனம், பிரார்த்தனை, காணிக்கைகளை மனம்போல் செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்

simmamjpg

ராசிநாதன் சூரியன் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் ஓய்வு இல்லாமல் வேலைச்சுமை இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு சில பிரச்னைகள் வரலாம். சுக்கிரன் 2ல் நீசமாவதால் வாக்குவாதம், வாக்குறுதி வேண்டாம். கண் சம்மந்தமாக சிறிய உபாதைகள் வரலாம். அவசரத் தேவைக்காக நகையை அடமானம் வைக்க வேண்டி வரும். குருவின் பார்வையால் சுப விஷயமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலை சம்மந்தமாக பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். வியாபாரம் போட்டிகள் இருந்தாலும் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.

கன்னி

kannijpg-2

சனிபகவான் 4ல் தொடர்வதால் அலைச்சல், பயணங்கள், வீண் செலவுகள் இருக்கும். அலுவலக வேலை சம்மந்தமாக குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் பணியாற்ற வேண்டி இருக்கும். சுக்கிரன் ராசியில் இருப்பதால் நிறைகுறைகள் உண்டு. மனைவியின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் விரும்பிய இரண்டு சக்கர வண்டி வாங்கி மகிழ்வார்கள். செவ்வாய், கேது மூலம் மன அமைதி குறையும். பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வசதியான பெரிய வீட்டிற்கு குடி போகும் நேரம் வந்துள்ளது. தொழில் லாபகரமாக இருக்கும். கான்ட்ராக்ட், கமிஷன் தொழிலில் பணம் குவியும். வேலையாட்களால் செலவுகள் வரும்.

துலாம்

thulaamjpg

குருவி்ன் பார்வை காரணமாக கையில் காசு, பணம் புரளும். நீண்ட நாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். வேலை சம்மந்தமாக பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். சுக்கிரன் நீசமாக இருப்பதால் மனைவியுடன் வாக்கு வாதம் வேண்டாம். திங்கட்கிழமை நல்ல செய்தி வரும். முக்கிய சந்திப்புகள் நிகழும். செவ்வாய், கேது அமைப்பு காரணமாக பஞ்சாயத்து, மத்தியஸ்தம் என்று பிரச்னைகள் வரலாம். எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது உத்தமம். கர்ப்பமாக இருப்பவர்கள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். பங்கு வர்த்தகத்தில் உங்கள் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசும்.

விருச்சிகம்

viruchigamjpg

சனிபகவான் வாக்கு ஸ்தானத்தில் வக்கிரமாக இருப்பதால் பிறர் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பண வரவுகள் சீராக இருந்தாலும் வீண் செலவுகள் ஏற்படும். செவ்வாயின் பார்வை காரணமாக சொத்து சம்மந்தமாக சமரச தீர்வு ஏற்படும். அலுவலகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வங்கியில் இருந்த சேமிப்பு பணம் தங்க நகைகளாக மாறும். குருவின் பார்வை காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணமடைவார்கள். சுப காரிய விசேஷங்களுக்கான முன்னேற்பாடுகளை செய்வீர்கள். வியாபாரம் கை கொடுக்கும். பணப்புழக்கம் உண்டு. புதிய தொழில் தொடங்கும் ராசி உள்ளது.

தனுசு

dhanusujpg

செவ்வாயின் பார்வை காரணமாக சொத்து சம்மந்தமாக இருந்த தடைகள் நீங்கும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வீண், வம்பு வழக்குகளில் சிக்கி இருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். குருவின் பார்வையால் குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புக்கள் மறையும். சுப விஷயமாக பயணங்கள் இருக்கும். குத்தகை, வாடகை, வட்டி பாக்கிகள் வசூலாகும். சூரியனின் பார்வையால் செல்வாக்கு கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வுக்கு யோகமுள்ளது. தொண்டை சம்மந்தமாக உபாதைகள் வந்து நீங்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் விட்டுக் கொடுத்துப் போவது நலம் தரும். அவசரத் தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள்.

மகரம்

makaramjpg

சனி விரய ஸ்தானத்தில் வக்கிரமாக தொடர்வதால் தடைகள், குழப்பங்கள் நீங்கும். சொத்து வாங்குவது சம்மந்தமாக முக்கிய முடிவுகள் வரும். குருவின் பார்வையால் சுப செலவுகள் ஏற்படும். சொந்த பந்தங்களின் விசேஷங்களை முன் நின்று நடத்துவீர்கள். உயர் பதவியில் இருக்கும் நண்பர் உதவுவார். சுக்கிரன் நீசமாக இருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிக் கவலைப்படுவீர்கள். வண்டி வகையில் செலவுகள் ஏற்படும். அக்கா, தங்கைகளிடையே மனவருத்தங்கள் வந்து நீங்கும். குறைந்த சம்பளத்தில் திருப்தி இல்லாமல் வேலை செய்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கும்பம்

kumbamjpg

மதில் மேல் பூனையாக இருந்த நிலைமாறி ஸ்திரமாக முடிவெடுப்பீர்கள். செவ்வாயின் பார்வையால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தனஸ்தான பலத்தால் அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்பீர்கள். குருவின் பார்வையால் மகன், மகளுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி திருமண பிராப்தம் கூடி வரும். சுக்கிரனின் பார்வை காரணமாக குலதெய்வ நேர்த்திக் கடன்களை மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். கன்னிப் பெண்கள் விரும்பிய இரண்டு சக்கர வண்டி வாங்குவார்கள். உறவுப் பெண்களால் மனஅமைதி கெடும். பயணத் திட்டங்களில் திடீர் மாற்றங்கள் வரும். புதிய செல்போன், லேப்டாப் வாங்குவீர்கள்.

மீனம்

meenamjpg

சுக்கிரனின் பார்வையால் நிறைகுறைகள் உண்டு. சகோதர உறவுகளால் செலவுகள் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மனக்கசப்புக்கள் வந்து நீங்கும். ஞாயிற்றுக்கிழமை புதிய முயற்சிகள் வேண்டாம். புதன் 5ல் இருப்பதால் தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டு. பெண்களுக்கு வயிறு, கர்ப்பப்பை சம்மந்தமான உபாதைகள் வர வாய்ப்புள்ளது. குருவின் பார்வையில் வசதியான பெரிய வீட்டிற்கு இடம் மாறும் யோகம் உள்ளது. கொடுக்கல், வாங்கலில் நின்று போன தொகை வசூலாகும். அலுவலகத்தில் வேலைச்சுமை, திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். பாக்கிகள் வசூலாகும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை.