3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய இளைஞன்!!

தீபாவளி

AD2

3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய இளைஞன்.

advertise here

உத்திரபிரதேச மாநிலத்தில் 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ldi

தீபாவளி அன்று வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3 வயது மகள் பட்டாசு விபத்தில் பலத்த காயமடைந்தார். அவரது வாய் சிதைந்த நிலையில் அலறித் துடித்தாள், அவளது வாயில் ஹர்பால் என்ற வாலிபர் பட்டாசு வைத்து வெடித்துள்ளார்.

AD1

உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வாய்ப்பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. தொண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவளது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து குழந்தையின் தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார்.