பெண்களை காதலில் விழ வைப்பது எப்படி!!

காதலில்

AD2

பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சில விஷயங்கள் ஆண்களிடம் பிடிக்கும். ஆண்களின் தலைமுடி, கண்கள், நிறம் என பெண்ணுக்கு பெண் இந்த எதிர்பார்ப்புகள் வேறுபடும்.

AD1

தோற்றத்தின் மூலம் பெண்களின் மனதில் இடம் பிடிப்பதை விட உணர்வு ரீதியாக இடம் பிடிப்பது நீண்ட நாள் நீடிக்கும்.இந்த விஷயத்தில் நீங்கள் நடிக்க முடியாது. நடித்தாலும் மாட்டிக்கொள்வீர்கள்.

ldi

பெருந்தன்மை என்பது பணம் மற்றும் பரிசுகள் விஷயத்தில் தாராளமாக இருப்பது இல்லை. ஒட்டுமொத்தமாக அனைத்து விஷயத்திலும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். உங்களிடம் நெருக்கமானவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுதல், உங்கள் நேரத்தை செலவிடுதல் போன்றவை இதில் அடங்கும்.

advertise here

அனைத்து பெண்களுக்கும் தங்களுக்கு ஆதரவு தரும் துணையை மிகவும் பிடிக்கும். அவர்களை யாராவது ஊக்குவித்து கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

Loves

தங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஆண்களை பிடிப்பது போல, தங்களது சாதனைகளை நினைத்து உற்சாகம் அடையும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். உதாரணமாக அவருக்கு பணி உயர்வு அல்லது பெரிய காரியங்களில் வெற்றியடையும் போது, அதை நீங்களே சாதித்தது போல எண்ணி பெருமை அடைய வேண்டும்.

loveeeeee

அந்த பெண்ணுக்கு பிடித்த விளையாட்டு, உணவுகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. அந்த பெண் மிகவும் காதலிக்கும், செய்ய துடிக்கும் ஒரு விஷயத்தில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், எளிதில் உங்களிடம் விழுந்துவிடுவார்கள்.

loveeeee

ஒரு பெண் உங்களிடம் தனது பிரச்சனைகளை சொல்லும் போது, தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லும் போது, கவனிக்காமல் இருப்பது மிகவும் தவறு. அவளது பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லுங்கள். ஆறுதல் சொல்லுங்கள். அந்த பெண்ணுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.

loveeee

அந்த பெண்ணிடம் மட்டுமல்லாமல், அனைவருடனும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அது அந்த பெண்ணுக்கு நீங்கள் எப்போதும் அவரை அன்பாக பார்த்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையை தரும்.

loveee

அவரது சாதனைகள் மற்றும் வெற்றிகளை கொண்டாடுங்கள். மேலும் வெற்றியடைய வாழ்த்துங்கள். அர்ப்ப விஷயமாக நினைத்துவிடாதீர்கள். அனைவருக்கும் ஒரு மென்மையாக பக்கம் இருக்கும். அந்த பெண்ணிடம் உங்களது அக்கறையை காட்டுங்கள்