கிளிநொச்சியில் திடீரென பற்றி எரிந்த கடை! – பல லட்சம் நாசம்!

கிளிநொச்சி

AD2

நேற்று (12.11.2018) இரவு கிளிநொச்சிக் கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள உந்துருளி விற்பனை நிலையத்தில் தீ விபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

th333

விற்பனை நிலையத்தில் ஏற்ப்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக திடீர் என கடை தீப்பிடித்து எரிந்துள்ளது உடனடியாக மின்சார சபை ,மற்றும் கரைச்சிப் பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.  மின்சார சபையினர் குறித்த பகுதிக்கான மின்சார இணைப்பினை துண்டித்ததன் பின்னர் அங்கு கூடிய இளைஞர்கள் , மக்கள் என பலரும் தீயை பகுதி அளவில் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்ததனர்.

advertise here

பல லட்சம் ரூபா மதிப்புள்ள உந்துருளிகள் விற்பனை உபகரணங்கள் சேதம். தீயணைப்பு வாகனம் இருந்த போதும் செயல்படுத்த முடியவில்லை என்று வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

thee

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் 97 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு நவீன தீயணைப்பு இயந்திரம் அடங்கலாக தீயணைப்பு பிரிவு கையளிக்கப் பட்டிருந்தது குறித்த தீயணைப்பு இயந்திரம் இயங்கு நிலைக்கு வராமையால் குறித்த பல லட்சம் இழப்பு இடம்பெற்றுள்ளது.

Please follow and like us: