கிளி.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு

கிளிநொச்சி

AD2

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் வடக்கு மாகாண மரநடுகை மாதத்தினை ஆரம்பிக்கும் முகமாக மரக்கன்றுகளை நாட்டும் ஆரம்ப நிகழ்வுகள்  பளை நகரபகுதி மற்றும் பொது விளையாட்டு மைதானம், பொது இடங்கள் என்பவற்றில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

advertise here

குறித்த கார்த்திகை மாதத்தில் ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டப்படும் என சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

ldi

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் எமது எதிர்கால சந்ததிக்காக தங்கள் உயிரையே அர்ப்பணித்தவர்களின் வழித்தடங்களில் வந்த நாங்கள் எமது அடுத்த சந்ததிக்காக இதையாவது செய்யவேண்டும்.

என்றும் நாம் இன்று செய்ய தவறினால் நாம் இயற்கையாயாலும் அளிக்கப்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

AD1

இந்த நிகழ்வில் சபையின் உபதவிசாளர் கஜன், உறுப்பினர்களான வீரவாகுதேவர், நகுலேஸ்வரன், கோகுல்ராஜ், டயாழினி, றமேஸ், சுகந்தி, பிரேமிளா, அருள்ச்செல்வி, டிஷந்தன் மற்றும் சபையின் செயலாளர் செ,அனுசியா, மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.