பொது இடங்களில் எச்சில் துப்பினால் ஒரு லட்சம் அபராதம்

அபராதம்

advertise here

இணையத்தளங்களில் அதிகளவிலான வாசகர்களினால் படிக்கப்பட்ட செய்திகள் இந்த பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. படிக்க தவறாதீர்கள். பொது இடத்தில் அசுத்தம் செய்வோருக்கு, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

fines

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது.

kkk

அங்கு தலைநகர் கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலுக்கு செல்லும் வகையில் 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நடை மேம்பாலத்தை, முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் திறந்து வைத்தார்.

advertise here

இரண்டு நாட்களுக்கு முன், அந்த மேம்பாலத்திற்கு சென்ற முதல்வர் மம்தா அங்கு பல இடங்களில் அசுத்தம் செய்யப்பட்டுள்ளதை பார்த்து கவலை அடைந்தார். இதையடுத்து மேற்கு வங்கத்தில் பொது இடங்களில் அசுத்தம் செய்வோருக்கு, அதிகபட்சமாக, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான மசோதா சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.