கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட பசுமை பூங்கா மக்கள் பாவனைக்கு!

கிளிநொச்சி

advertise here

கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட பசுமை பூங்கா மக்கள் பாவனைக்கு. – Share and Support Us.

GP1

கிளிநொச்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்ட பசுமை பூங்கா  மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு  கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.

GP2

நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 40 மில்லியன் நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட குறித்த பூங்கா கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

advertise here

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பூங்காவின் பெயர்ப்பலகையினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வட மாகாண சபை முன்னால் அமைச்சர் குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.