சொர்க்கத்தில் உள்ள அப்பாவுக்கு மகன் எழுதிய கடிதம்..! ஆச்சர்யபட வைத்த பதில் கடிதம்

கடிதம்.

advertise here

ஸ்காட்லந்தில் உள்ள 7 வயதுச் சிறுவன் சொர்க்கத்தில் உள்ள தனது அப்பாவுக்கு எழுதிய கடிதம் பத்திரமாய் போய்ச் சேர்ந்துள்ளதாக அவனுக்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ldi

2014ஆம் ஆண்டில் ஜேஸ் ஹின்மன் (Jase Hyndman) தந்தையை இழந்தார். ஒவ்வோர் ஆண்டும் தவறாமல், தந்தையின் பிறந்தநாள் அன்று ஜேஸும் அவனது 10 வயது அக்காவும் அப்பாவை நினைவுகூராமல் இருந்ததில்லை.

letter

இந்த ஆண்டு தன்னுடன் இல்லாத அப்பாவுக்கு ஆசையாய்க் கடிதம் எழுதி அதை அஞ்சலகத்துக்கு அனுப்பியும் வைத்துள்ளார் ஜேஸ். ஜேஸையும் அவரது குடும்பத்தையும் ஆச்சரியப்பட வைத்தது, அதற்குக் கிடைத்த பதில் கடிதம்.

ldid

ஜேசின் கடிதம் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் தாண்டி சொர்க்கத்தில் உள்ள அப்பாவிடம் பாதுகாப்பாய்ச் சேர்க்கப்பட்டதாக Royal Mail அஞ்சல் சேவை நிறுவனம் கூறியிருந்தது.

ldi

அஞ்சலகத் துணை நிர்வாகி சீன் மிலிகான் பதில் கடிதத்தை எழுதியுள்ளார். அந்தக் கடிதம் ஜேஸுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததாகவும் அது பத்திரமாக உரியவரிடம் போய்ச் சேர்ந்துவிட்டது என்பதைச் சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் கடிதத்தில் சீன் தெரிவித்துள்ளார். ஜேஸின் தாயார் டெரி கோப்லண்ட் அந்தச் செயலைப்

advertise here

பாராட்டினார். மனித நேயத்தின் மீது தமக்கு மீண்டும் நம்பிக்கை வர இது ஒரு காரணம் என்று அவர் Facebookஇல் குறிப்பிட்டுள்ளார். மகன் கடிதம் கிடைத்து அளவில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். Royal Mail Facebook பக்கத்தில் அவர் செய்த பதிவு 250,000க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளது.