சாலையில் சென்ற இளம் ஆசிரியையை தூக்கிச் சென்ற கும்பல்!!

சாலையில்

advertise here

தமிழகத்தில் பள்ளி ஆசிரியயை, அவரது டூவீலரில் காரை விட்டு மோதி கீழே விழ வைத்து பின்னர் கடத்திச் சென்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ldi

கும்பகோணம் லால் பகதூர் சாலையில் உள்ள ஏஜேசி மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுபவர் காயத்ரி (31) நேற்று மாலை பள்ளியை விட்டு டூவீலரில் தனது வீட்டுக்குக் கிளம்பினார் காயத்ரி.

teach

அப்போது மகாமக குளம் அருகே நீல நிற குவாலிஸ் கார் ஒன்று காயத்ரி டூவீலரில் மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி விழுந்தார். அப்போது காரிலிருந்து இறங்கிய சிலர் காயத்ரியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர்.

தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த காயத்ரி குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் அடிப்படையில் காவல்துறையினர்

advertise here

விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். கடத்தப்பட்ட ஆசிரியைக்கு திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இதனிடையில் காயத்ரியை கார்த்திக் என்பவர் கடத்திச் சென்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.