இந்த வார ராசி பலன்கள் (04-12-2018 முதல் 10-12-2018 வரை)

மேஷம்

meshamjpg

மேஷராசி அன்பர்களே! வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். மற்றவர்களுடன் பேசும்போது நிதானம் தேவை. செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள்.

ldi

பழைய கடன்களைப் பக்குவமாகச் சமாளிப்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடிய வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.

rishabamjpg

ரிஷபம்: ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு உகந்த வாரம். நீண்டநாளாகச் சந்திக்க நினைத்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இருக்காது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும்.

ldid

இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதாலும் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பதாலும் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

midhunamjpg

மிதுனம்: மிதுனராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும் வாரம். பணப்புழக்கத்தைப் பொறுத்தவரை வாரப் பிற்பகுதி சிறப்பாக இருக்கும். முக்கிய முடிவு எடுக்கும்போது குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.

advertise here

வீட்டில் சுபநிகழ்ச்சி நடப்பதற்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வேலைக்குச் செல்லும் அன்பர்கள் தற்போது இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்யவேண்டாம். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும்.

kadagamjpg

கடகம்: கடகராசி அன்பர்களே! பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும். வீடு, மனை வாங்கவேண்டும் என்று நீண்டநாள்களாக நீங்கள் நினைத்தது கைகூடி வர வாய்ப்பு உள்ளது. பழைய கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

ldi

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு. வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும். கலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

simmamjpg

சிம்மம்: சிம்மராசி அன்பர்களே! பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு வருத்தம் தெரிவிப்பார்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும். வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும்.

kannijpg-2

கன்னி: கன்னிராசி அன்பர்களே! பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொண்டால் சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.

thulaamjpg

துலாம்: துலாராசி அன்பர்களே! வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை. அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது அவசியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ எதிர்பார்க்கமுடியாது. வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

viruchigamjpg

விருச்சிகம்: விருச்சிகராசி அன்பர்களே! பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். ஒருசிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும். கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விட கூடுதல் வருமானம் கிடைக்கும்.

dhanusujpg

தனுசு: தனுசுராசி அன்பர்களே! பணவரவுக்கு குறைவிருக்காது. ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது. மூத்த சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்து செல்லவும். பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் அதனால் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளையும் எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும்.

makaramjpg

மகரம்: மகரராசி அன்பர்களே! எதிர்பார்த்ததைவிட பணவரவு கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். வீண் செலவுகள் இருக்காது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக கூடுதலாக உழைக்கவும் வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

kumbamjpg

கும்பம்: கும்பராசி அன்பர்களே! குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது.

ldi

தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். கலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

meenamjpg

மீனம்: மீனராசி அன்பர்களே! பொருளாதார வசதிக்கு குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.

Please follow and like us: