திருமணம் முடிந்து 36 மணிநேரத்தில் காதல் மனைவி! கண்கலங்க வைக்கும் காரணம்

காதல்

new1 copy

பிரிட்டனில் திருமணம் முடிந்த 36 மணி நேரத்தில் பரிதாபமாக பெண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

new

பிரிட்டனைச் சேர்ந்த டாஷா பர்டன் என்ற 36 வயது பெண் கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக, தன்னுடைய பிறந்தநாளன்று டேனியல் கோர்லி என்ற நபரின் காதல் வலையில் விழுந்துள்ளார். அடுத்த 6 மாதத்திலே இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு

ldid

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு ஒருநாள் வயிற்று வலியின் காரணமாக டாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில்

ldi

கடந்த நவம்பர் 27 ஆம் திகதியன்று மீண்டும் டாஷாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அத்துடன் அவர் இரண்டு வாரங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியமையைத் தொடர்ந்து தனது காதலனை மணமுடிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து

advertise here

அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. அவர்களுடைய திருமணம் இங்கிலாந்தில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனையில் நடைபெற்றது. திருமணம் முடிந்த 36 மணிநேரத்தில் டேனியல் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு சோகமான பதிவினை வெளியிட்டார்.

new

அதில், துரதிஷ்டவசமாக நான் என்னுடைய அழகான மனைவியை இன்று மாலை 5.30 மணிக்கு இழந்துவிட்டேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புக்கு மத்தியில் அமைதியான முறையிலே அவள் கடந்து சென்றாள். நான் முற்றிலும் மனமுடைந்துவிட்டேன். ஆனால் அவள் நிச்சயம் என்னுடைய மகன் மூலம் என்னுடன் இருப்பாள் என்பது எனக்கு தெரியும் என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.