கூகுளில் முட்டாள் என்று தேடினால் டிரம்ப் படங்கள் வருவது ஏன் – சுந்தர் பிச்சை விளக்கம்.!

கூகுளில்

new1 copy

அமெரிக்க அரசியல் கட்சிகளிடம் கூகுள் பாரபட்சமாக செயல்படுகிறது என்றும், சீனாவில் புதிய தேடுப்பொறியை கூகுள் அறிமுகப்படுத்த உள்ளது என்று

advertise here

வெளியான தகவல் குறித்தும் நேற்றைய தினம் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன்னர் ஆஜராகி விளக்கமளித்தார் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை.

new

அரசியல் பரபட்சங்களுடன் கூகுள் செயல்படவில்லை என விளக்கமளித்த சுந்தர் பிச்சை, டிரம்ப் விவகாரத்தை பொறுத்தமட்டில் தாங்கள் எதனையும் திட்டமிட்டு சேர்க்கவில்லை எனவும், தற்போது மக்கள்

ldi

அதிகப்படியாக பயன்படுத்தும் தகவல்கள், பதிவுகள் உள்ளிட்டவற்றை கொண்டே தேடுபொறியில் தகவல்கள் இணைக்கப்படுவதாக விளக்கமளித்துள்ளார். மேலும், சீனாவில் புதிய தேடுபொறியை அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லையெனவும், வெறுப்புணர்வு மற்றும் வன்முறை கருத்துக்களை தணிக்கை செய்த பின்பே வெளியிடுவதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.