இலங்கையில் வாகன விலைகள் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்

இலங்கை

advertise here

2019ஆம் ஆண்டுக்கான வாகனங்களின் இறக்குமதி தாமதமாகும் என வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Final

இலங்கையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்னும் சமர்ப்பிக்கப்படாமை மற்றும் ரூபாவின் விலையில் தொடர்ந்தும் ஏற்பட்டு வருகின்ற வீழ்ச்சி என்பன இதற்கான காரணங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Vehicles

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், தற்போது வாகனங்களின் இறக்குமதியை மேற்கொண்டிருக்க முடியும்.

Final 0002

அவை பெப்ரவரி அளவில் இலங்கையை வந்தடைந்திருக்கும். எனினும் தற்போது அதற்கான வாய்ப்புக்கள் இல்லை என பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். எனினும் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக வாகனங்களுக்கான விலைகளை தீர்மானிக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *