இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எல்லாம் இந்த ஆண்டில் இருந்து.. காதல் வாழ்க்கை சூப்பராக அமையுமாம்..!

காதல் வாழ்க்கை

advertise here

2018 முடிந்து 2019 தொடங்கிவிட்டது. இந்த ஆண்டில் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் உங்களுக்குள் தொடங்கியிருக்கும். இன்பங்களும், துன்பங்களும் கலந்துதான் வாழ்க்கை எப்பொழுதுமே இருக்கும்.

Final

ஆனால் இதில் எது அதிகம் இருக்கிறது என்பதை பொறுத்துதான் நமது இந்த ஆண்டிற்கான தலைவிதி நிர்ணயிக்கப்படும். நீங்கள் பிறந்த ராசி எப்படி உங்களை தலைவிதியை இந்த ஆண்டில் நிர்ணயிக்கிறதோ அதேபோல நீங்கள் பிறந்த வருடமும் உங்கள் தலைவிதியை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

Final 0002

அந்தவகையில் நீங்கள் பிறந்த மாதத்தின்படி இந்த ஆண்டில் உங்களுக்கு என்ன நல்லது நடக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஜனவரி 2019 உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் ஆண்டில் வேலை, காதல் என பல கொண்டாட்டங்களை கொண்டுவரும்.

ldi

உங்கள் வருங்காலத்தை பற்றி நீங்கள் பல ஆண்டுகளாக நினைத்து கவலைப்பட்டு கொண்டிருப்பீர்கள். ஆனால் இந்த வருடம் உங்கள் ஆண்டில் வசந்தகாலத்தை கொண்டுவரும் ஆண்டாக இருக்கும். உங்களின் சரியான குறிக்கோள்களை முன்னிறுத்தி அதனை நோக்கி முன்னேறுங்கள். உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள், மற்றவர்கள் உங்களை கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். இந்த வருடம் உங்கள் வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்கும்.

Loves

பிப்ரவரி நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்களுக்கு 2018ல் கிடைக்காமல் இருக்கலாம் ஆனால் அவை அனைத்தும் 2019ல் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் குணங்களை உங்கள் நண்பர்கள் ரசித்து பின்பற்ற தொடங்குவார்கள். 2019 உங்களுக்கு நேர்மறை அதிர்வுகளுடன் தொடங்கும், முடிந்தவரை மோதல்களை தவிருங்கள்.

astrologyy

உங்களை சுற்றியிருப்பவர்கள் பெரும்பாலும் உங்களின் முடிவுகளை மதித்து ஆமோதிக்க தொடங்குவார்கள். உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் வாழ்வில் முக்கியமான பங்கு வகிப்பீர்கள்.

loveeeeeeeee

மார்ச் உங்கள் ஆண்டில் செழிப்பை உண்டாக்கும் ஆண்டாக இருக்கும். நீங்கள் நினைத்த அனைத்தும் நடக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். உங்கள் தினசரி வாழ்க்கையில் இந்த ஆண்டு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும் ஆண்டாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழும், அதனால் உங்கள் குறிக்கோளை மறந்துவிடாதீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் இந்த ஆண்டு உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்காத பல மாற்றங்களை வழங்கும்.

loveeeeeeee

ஏப்ரல் இந்த ஆண்டு காதல் நீங்கள் சந்திக்கும் காற்றில் நிறைந்திருக்கும். யாரிடம் இருந்து நீங்கள் அன்பு வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ அவர்கள் உங்கள் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். உங்கள் நேரத்தை தர்க்கரீதியான சிந்தனைகளில் சரியாக முதலீடு செய்தால் எந்தவிதமான கஷ்டங்களையும், சூழ்நிலையையும் சமாளிக்கலாம். எந்த செயலையும் தொடங்குவதற்கும் முன் தீர ஆலோசித்து விட்டு அதில் இறங்குவது உங்களுக்கு ஏற்படும் பேரழிவை தடுக்கும்.

loveeeeeee

மே இந்த ஆண்டு உங்களுக்கு மாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்களால் அதனை பார்க்க முடியவிட்டாலும் நடக்கும் நிகழ்வுகள் நீங்கள் விரும்பும்படி நடப்பதை உணர்வீர்கள். இந்த ஆண்டு நீங்கள் பெரிய கனவுகளை காண இந்த ஆண்டு உங்களுக்கு ஊக்கமளிக்கும். உங்களுக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் உங்களுக்கு தேவையான, சரியான வாய்ப்புகளை மட்டும் தேர்ந்தெடுங்கள்.

loveeeeee

ஜூன் ஆதரவான ஆண்டாக 2019 இருக்கும். இத்தனை ஆண்டுகளாக மூடியிருந்த கதவுகள் அனைத்தும் இந்த ஆண்டு திறக்கும். அமைதியும், மனநிறைவும் உங்கள் வாழ்வில் நிறைந்திருக்கும், இது உங்களுக்கு புத்துணச்சியை வழங்கும். சில சிக்கல்களை சந்திக்க நேர்ந்தாலும், உங்களின் தொடர்முயற்சி அந்த சிக்கல்களை சமாளிக்க உதவும். கடுமையான நேரங்களை சமாளிக்க நீங்கள் நம்பிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

loveeeee

ஜூலை வெற்றி 2019ல் உங்களை தேடிவரும். உங்களின் நேர்மை நீங்கள் விரும்பும் அனைத்தையும் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும். உங்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமான இரண்டு பண்புகள் பொறுமை மற்றும் சரியான முடிவுகளை எடுப்பது. உங்களின் ஆசைகளை மறைத்து வைத்திருந்தது போதும், உங்களின் ஆசைகள் நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது. உங்களின் பதட்டத்திற்கும், சந்தேக குணத்திற்கும் விடுதலை கொடுத்துவிட்டு உங்களை சுற்றியிருக்கும் வாய்ப்புகளை கண்ணை திறந்து பாருங்கள்.

loveeee

ஆகஸ்ட் இந்த ஆண்டு நீங்களே உங்களை புதியவராக பார்ப்பீர்கள். இறுதியாக நீங்கள் உங்களை பற்றி சரியாக மதிப்பீடு செய்யும் இடத்தை நெருங்கிவிட்டீர்கள். உங்கள் கனவு மற்றும் இலட்சியங்களை நிறைவேற்றும் வழிகளை கண்டறிவீர்கள். இந்த ஆண்டு நீங்கள் எதார்த்தமானவராகவும், பணிவானவராகவும் மாறுவீர்கள். நிறைய புதிய சவால்களை சந்தித்தாலும் அதனை சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக இருக்கும்.

loveee

செப்டம்பர் நீங்கள் எதிர்பாராத ஒருவருடன் அழகான உறவை இந்த ஆண்டில் வளர்த்துக்கொள்வீர்கள். அது உங்கள் இருவருக்குமே மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கும். இந்த ஆண்டின் முதல் சில மாதங்கள் உங்களுக்கு சுமாராக இருந்தாலும் ஆண்டின் பிற்பகுதி உங்களுக்கு அருமையானதாக இருக்கும். உங்கள் எதிர்காலத்திற்கான நேர்மறை திட்டங்களை உங்கள் இதயத்தின் பேச்சை கேட்டு திட்டமிடுங்கள்.

lovee

அக்டோபர் இந்த ஆண்டு உங்களுக்கு பல உறவுகளை கொண்டுவரும். நீங்கள் மற்றவர்களை எளிதில் நம்பிவிடுவதால், ஏமாந்துவிடுமோ என்று பயப்படாதீர்கள், இந்த ஆண்டு உங்களுக்கு கிடைக்கும் உறவுகள் உங்களுக்கு உண்மையானதாக இருக்கும். இப்பொழுது உங்களின் தேவை என்னவெனில் வாழ்க்கைக்கான நீண்டகால திட்டமிடல்தான். உங்களின் புதிய யோசனைகள் உங்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும். ஆன்மீகத்தின் மீதான உங்களின் ஆர்வமும் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும்.

love

நவம்பர் இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சிகளை உண்டாக்கும் ஆண்டாக அமையும். உங்களின் எதிர்காலத்திற்கான வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இந்த ஆண்டு உங்களுக்கு பல வெகுமதிகளை பெற்றுத்தரும். ஆனால் அதற்கு நீங்கள் தீவிரமாகவும், கவனமாகவும் இருக்கவேண்டியது அவசியம். உங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் உறவுகளில் பல மாற்றங்கள் நேரும். இதன் மூலம் உங்கள் வேகமும், தனிப்பட்ட ஆற்றலும் பெருமளவில் அதிகரிக்கும்.

love

டிசம்பர் பலரும் உங்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் ஆண்டாக இது இருக்கும். உங்களின் வசீகரம் இந்த ஆண்டு பன்மடங்கு அதிகரிக்கும். ஆனால் உங்கள் அன்பை யாருக்கு கொடுக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். நீங்கள் பெரும்பாலான நேரத்தை பொழுதுபோக்கிலும், மகிழ்ச்சியாக இருப்பதிலும் செலவளிப்பீர்கள். உங்களின் யோசனைகளை மற்றவர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளுங்கள். இது உங்கள் மீதான அவர்களின் மதிப்பை அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *