பிரபாகரனின் உயிர் நண்பர் காலமானார்

பிரபாகரனின்

advertise here

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழீழ தேசியத் தலைவரின் உயிர் நண்பர்களில் ஒருவருமான பிறைசூடி காலமாகியுள்ளார்.

Final

வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த பிறை சூடி சென்னையில் இன்று காலமானார் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரச சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்த பிறைசூடி தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டு

Pirai

தமிழ் அரச ஊழியர்கள் கட்டாயம் சிங்கள மொழியைக் கற்க வேண்டும், சிங்கள தேர்ச்சிப் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என கட்டாயப்படுத்தியது. இதன்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசபணியை தாமாகவே துறந்து வந்தவர்கள் வரிசையில் மிக முக்கியமானவர் ஆவார்.

Final 0002

அது மாத்திரமன்றி தமிழினப் பற்றாளராகவும் விளங்கி வந்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நெருங்கி தொடர்பினை வைத்திருந்த அவர், புலிகளின் முக்கியமான உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இறுதிக்கட்டப் போருக்குப் பின்னர் தமிழகத்தில் தங்கியிருந்த அவர், உடல் நலக்குறைவினால் இன்று காலமானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Tamil win News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *