தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்த மகள்.. தந்தை செய்த செயல்..!

செல்போனில்

advertise here

செல்போனில் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருப்பதை கண்டித்தும், கேட்காத மகளை அப்பாவே தீயிட்டு கொளுத்திய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Final

மும்பையை அடுத்துள்ள விரார் பகுதியைச் சேர்ந்தவர் முகமது. இவரது 16 வயது மகள் ஷாசிதா. இவர் தனது செல்போனில் யாரோ ஒருவருடன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது தந்தை முகமது, ஷாசிதா ஆண்

Selpo

நண்பருடன்தான் இப்படி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறார் என சந்தேகம் அடைந்து அதனை தட்டிக் கேட்டுள்ளார். மறுபடியும் இதேபோன்று போனில் பேசிக்கொண்டே இருக்காதே எனக் கண்டித்துள்ளார்.

Final 0002

ஆனால் தந்தை கண்டித்தும், ஷாசிதா மீண்டும் மீண்டும் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை முகமது, தான் பெற்ற மகள் என்றும் பாராமல் ஷாசிதா மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார். அப்போது

ldi

ஷாசிதாவின் தாயார் அதனை தடுக்க முயன்றுள்ளார். ஆனாலும் அவரின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனையடுத்து உடலில் மளமளவென பரவிய தீயுடன் ஷாசிதா கதறியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஷாசிதா மீது

Babact

பரவிய தீயை அணைத்துள்ளனர். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாசிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடலில் 70 சதவீத அளவிற்கு தீக்காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தனையடுத்து விரைந்து

letter

வந்த போலீசார் முகமதுவை கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. மகள் தொடர்ச்சியாக போனில் பேசிக்கொண்டு இருந்ததால் இந்தச் செயலில் ஈடுபட்டதாக முகமது போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அதேசமயம் மகள் ஷாசிதா, யாருடன் பேசிக்கொண்டிருந்தார் என்ற தகவலை, முகமது போலீசாரிடம் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *