இன்றைய நாள் உங்களிற்கு எப்படி தெரியுமா..? – 08.01.2019 – செவ்வாய்கிழமை

இன்றைய நாள்

astrologyy

இன்றைய நாள் உங்களிற்கு எப்படி தெரியுமா..? – 08.01.2019 – செவ்வாய்கிழமை – வாசக நண்பர்களே இந்த பதிவின் இறுதியில் தவறாமல் பாருங்கள்.

மேஷம்

meshamjpg

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் யோசனையை குடும்பத்தினர்

ldi

ஏற்றுக்கொள்வார்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

rishabamjpg

ரிஷபம்: கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

advertise here

அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ள தாக இருக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

midhunamjpg

மிதுனம்: இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால்

ldi

சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். ஆனால், அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்.

kadagamjpg

கடகம்: தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளை கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையை

Final 0002

அதிகரிக்க செலவு செய்யவேண்டி வரும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.

simmamjpg

சிம்மம்: வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

kannijpg-2

கன்னி: சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.

thulaamjpg

துலாம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

viruchigamjpg

விருச்சிகம்: தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.

dhanusujpg

தனுசு: உற்சாகமான நாளாக அமையும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

makaramjpg

மகரம்: புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். ஒரு சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வு ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது, திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

kumbamjpg

கும்பம்: தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு

Final

சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலுள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

meenamjpg

மீனம்: எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்யவேண்டி வரும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *