அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது பேஸ்புக்!!

பேஸ்புக்

advertise here

பேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது. இதன் ஊடாக புகைப்படங்களை சேமித்து வைத்திருக்க முடிவதுடன், அவற்றினை பகிர்ந்துகொள்ளவும் முடியும். எனினும்

F

இந்த அப்பிளிக்கேஷனை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த

Facebook--735x400

அப்பிளிக்கேஷன் ஊடாக பயனர்களின் தொலைபேசி இலக்கங்கள் பகிரப்படுகின்றமையே இவ்வாறான முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த

Facebook

அப்பிளிக்கேஷனை 87 மில்லியன் iOS மற்றும் Android பயனர்கள் தரவிறக்கம் செய்து நிறுவியுள்ளதுடன், 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் மாத்திரம் அதிக பட்சமாக 10.7 மில்லியன் தரவிறக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த மாதத்தில் 150,000 தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *