மாசி மாதம் ராசிபலன்கள்: மகரம் – 13.02.2019 முதல் 14.03.2019 வரை

மகரம்

makaramjpg

தென்றலாய் காணப்பட்டாலும் அவ்வப்போது புயலென மாறும் நீங்கள் பேச்சிலும், செயலிலும் வேகத்தைக் காட்டுபவர்கள். வீரத்துடன் விவேகமும் கொண்டு செயல்படும் நீங்கள், செய்நன்றி மறவாதவர்கள். சூரியன் ராசியை

imageproxy

விட்டு விலகி 2ல் நிற்பதால் ஓரளவு கோபம் குறையும். என்றாலும் சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். கண் எரிச்சல், காது வலி வந்து போகும். புதன் வலுவான வீடுகளில் செல்வதால் உங்களின் நட்பு வட்டம் விரியும். தந்தைவழி

makara-rasi-26-1482721927

சொத்துகள் வந்து சேரும். வெளி நாட்டில் இருக்கும் உறவினர், நண்பர் உதவுவார்கள். விசா கிடைக்கும். 4ம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று நிற்பதால் தாயாருடன் மனத்தாங்கல் வரும். என்றாலும் தாய் வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

maxresdefault-7-800x439

வழக்கால் இருந்த சில நெருக்கடிகள் நீங்கும். சகோதரங்களால் செலவுகள் வரக்கூடும். ராகுவும் வலுவாகக் காணப்படுவதால் கடந்த கால அனுபவங்களைப் பயன்படுத்தி அனுபவ அறிவாலும், யதார்த்தமான பேச்சாலும் வி.ஐ.பிகளின் மனதில்

image_d50fa68fc5

இடம் பிடிப்பீர்கள். பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு கிடைக்கும். என்றாலும் ராசிக்கு 12ல் கேதுவும், சனியும் நிற்பதால் வேலைச்சுமை, அலைச்சலால் அவ்வப்போது தூக்கம் குறையும். புண்ணிய ஸ்தலங்களிலிருந்து

submarine-1-800x532

பிரசாதங்கள் வரும். வழிபாட்டு தலங்களில் முதல் மரியாதை கிடைக்கும். உங்கள் ராசிக்கு குருவும், சுக்கிரனும் வலுவாக நிற்பதால் பணவரவு திருப்தி தரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். நாடாளுபவர்களின் நட்பும் கிடைக்கும்.

123BMadurai

குலதெய்வப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். பள்ளிக் கல்லூரி கால

mahabharat-wallpaper-3

தோழியை சந்திப்பீர்கள். மாணவர்களே படிப்பில் ஆர்வம் பிறக்கும். கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த

kungumam

சிக்கல்கள் விலகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். புரோக்கரேஜ், எண்டர்பிரைஸ் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் சுமுகமான லாபம் உண்டு. உத்யோகத்தில் தொல்லைகள் அகலும். மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களிடம் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்த சக ஊழியர்கள் உங்களின் பரந்த மனதை

iranaimadu-656546554

புரிந்து கொள்வார்கள். குறை கூறியவர்களுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் சில வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சிலருக்கு ப்ரமோஷன் கிடைக்கும். கலைத்துறையினர்களே! கற்பனைத்திறன் அதிகரிக்கும். அயல்நாட்டு நிறுவனங்கள்

marriage600

வாய்ப்பளிக்கும். விவசாயிகளே எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். வங்கிக் கடன் அடைபடும். புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறும் மாதமிது. ராசியான தேதிகள்:பிப்ரவரி 15, 16, 17, 18, 24, 25, 26, 27 மற்றும் மார்ச் 6, 8, 9, 10, 11. சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 19ம் தேதி காலை 10.30மணி முதல் 20, 21ம் தேதி பிற்பகல் 1மணி வரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *