மாசி மாதம் ராசிபலன்கள்: மீனம் – 13.02.2019 முதல் 14.03.2019 வரை

மீனம்

meenamjpg

கடல்போல் விரிந்த மனதும், கலகலப்பாகப் பேசும் குணமும் உடைய நீங்கள் மனசாட்சிக்குட்பட்டு செயல்படுபவர்கள். உங்கள் ராசிக்கு 12ல் புதனும், சூரியனும் அமர்ந்திருக்கும் போது இந்த மாதம் பிறப்பதால் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். அதிகாரப் பதவியில்

meenam-5-29-1482978074

இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு மாறுவீர்கள். வழக்கு வெற்றி அடையும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். 2ல் செவ்வாய் நிற்பதால் சேமிப்புகள் கரையும். சில நேரங்களில்

watermelon

கோபப்பட்டு பேசுவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதங்கள், ஈகோ பிரச்னைகள் வந்து போகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். ராகுபகவான் 4ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். பூர்வீக சொத்தை

IME2

அதிக செலவு செய்து சீர்த்திருத்தம் செய்வீர்கள். கேதுவும், சனியும் 10ல் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். அக்கம். பக்கம் வீட்டாருடன் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்களுடைய ராசிக்கு 9ம் வீட்டில் குரு நிற்பதால் வீண் செலவுகள், அலைச்சல்களெல்லாம் குறையும். அரசாங்கத்தால்

nithuimeanan

அனுகூலம் உண்டு. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுக்கிரன் வலுவான வீடுகளில் செல்வதால் அழகு, இளமை கூடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் கூடி வரும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி

tournaments

கட்டுவது நல்ல விதத்தில் முடியும். அரசியல்வாதிகளே! பொது விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். கன்னிப்பெண்களே! காதல் கை கூடும். எண்ணங்கள் பூர்த்தியாகும். மாணவர்களே! கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு பெறுவீர்கள். ஆசிரியரின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புகழ் பெற்ற

meera-jasmine15

நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். கடையை அழகுபடுத்தி அதிக வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம்

Welcome_To_Kilinochchi

லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சம்பளம் உயரும். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு

Rameshwaram-5778_5

அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். விவசாயிகளே! உங்கள் கடன் தள்ளுபடியாகும். ஊரில் மதிப்பு மரியாதை கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் மாதமிது. ராசியான தேதிகள்: பிப்ரவரி 14, 16, 19, 20, 22, 28 மற்றும் மார்ச் 1, 2, 3, 10, 11, 13. சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 23ம் தேதி மாலை 4.25 மணி முதல் 24, 25ம் தேதி இரவு 9.35 மணி வரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *