முதலாளி எடுத்த நடவடிக்கை.. குழந்தையை கொடூரமாக கொன்ற இளம் பெண்

முதலாளி

ldi

தமிழகத்தில் வேலையில் இருந்து நீக்கிய கடை உரிமையாளரின் மகனைக் கொன்ற இளம் பெண்ணுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. திருச்சியை சேர்ந்தவர் சிவக்குமார். செல்போன் கடை

kolio

நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லெட்சுமிபிரபா. இவர்களின் மகள் சிதானி (9), மகன் சிரீஸ் (3). கடந்த 2016-ம் ஆண்டு தான் சிரீஸ் மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்டான். சிவக்குமார் செல்போன் எண்களுக்கு ரீசார்ஜ் செய்யும் கடை தொடங்கினார். அதை லெட்சுமிபிரபா கவனித்து வந்தார்.

murder2

இந்நிலையில், கடையில் ரோஸ்லின் (26) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். வேலைக்குச் சேர்ந்த சில நாட்களில், ரோஸ்லின், லெட்சுமிபிரபாவின் கடை கல்லாவில் இருந்த பணத்தை திருடுவது தெரிய வந்தது. இதனால்

murder_25-1

ரோஸ்லினை அவர் வேலையை விட்டு நீக்கினார். கடந்த 2016 ஜூலை 16-ம் திகதி பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய சிறுவன் சிரீஸைக் காணவில்லை என அவரின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் வலைவீசி தேடினர்.

kolio

அப்போது காவல் நிலையத்துக்குச் சென்ற ரோஸ்லின் சிறுவன் சிரீஸை தான் கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார். விசாரணையில், லெட்சுமிபிரபா தன்னை வேலையில் இருந்து நீக்கியதால் அவர் மீது ரோஸ்லினுக்கு ஆத்திரம் ஏற்பட்டதும். இதனால் லெட்சுமிபிரபாவை பழிவாங்க அவருடைய மகன் சிரீஸை

ldi

பாழடைந்த ஒரு வீட்டின் அருகே அழைத்துச் சென்று அவனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், முகம், மூக்கு, மர்ம உறுப்பு உள்ளிட்டவற்றில் கத்தியால் கீறி கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து

court-1

கைது செய்யப்பட்ட ரோஸ்லின் மீது திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் குழந்தையைக் கடத்திய குற்றத்துக்கு ஒரு ஆயுள் தண்டனையும், கொலை செய்த குற்றத்துக்காக ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.4,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *