பூநகரி பிரதேச அபிவிருத்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிபாரிசில் நிதி ஒதுக்கீடு

பூநகரி

poodev1

பூநகரி பிரதேச அபிவிருத்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சிபாரிசின் அடிப்படையில் ஊரெழுட்சி திட்டத்தில் 35.9 மில்லியன் ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளதாக பூநகரி பிரதேச சபை

ldi

உப தவிசாளர் சி.சிறிரஞ்சன் தெரிவித்துள்ளார். பூநகரி குமுழமுனை சென் அன்ரனிஸ் விளையாட்டு கழக வீரர்களை சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கழக அபிவிருத்திச்

poodev

செயற்பாட்டுக்கு ஐந்து இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதுடன், பிரதேச சபையினால் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட வீதிகள் , மற்றும் ஆலயங்கள் , விளையாட்டுக்கழகம் என்பனவற்றுக்கு

advertise here

நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதேவேளை, பிரதேச சபையின் கரியாலை நாகபடுவான், குமுழமுனை உறுப்பினர்களான தர்மராசா மற்றும் முழங்காவில் தமிழரசுக் கட்சியின் அமைப்பாளர் த.குவேந்திரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் யோ.தனராஜ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *