யாழ். மற்றும் தலைமன்னாரில் இருந்து தமிழகத்திற்கு நேரடி கப்பல் சேவை

நேரடி கப்பல் சேவை

kapa2

காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாரில் இருந்து தமிழகம் உட்பட தென்னிந்தியாவின் பிரதான துறைமுகங்களுக்கு பயணிகள் மற்றும் பொருட்களை

ldi

ஏற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்கும் அடிப்படையான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில்

kapal

காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் தலைமன்னார் கப்பல்துறையையும் புனரமைக்கும் திட்டங்களை

advertise here

இலங்கை துறைமுக அதிகார சபை உருவாக்கி வருகிறது. காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் போது அதன் இறங்குதுறை முழுமையாக

downloadv

புனரமைக்கப்பட உள்ளது. வணிக கப்பல்கள் மற்றும் படகுகளை கையாள 167 மீற்றர் நீளமும் 22 மீற்றர் அகலமும் கொண்ட புதிய இறங்குதுறை நிர்மாணிக்கப்பட உள்ளது. இவற்றுக்கான இந்தியாவிடம் இருந்து

ldi

45.27 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய கடன் கிடைக்க உள்ளது. காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படும் நடவடிக்கையோடு, அங்கு பழைய சீமெந்து தொழிற்சாலை அமைந்திருந்த

kapa2

பிரதேசத்தில் புதிய தொழிற்பேட்டை நிர்மாணிக்கப்பட உள்ளது. மேலும் காங்கேசன்துறை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யவும் சுற்றுலாத்துறை அமைச்சு திட்டங்களை உருவாக்கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *