ராணுவ வீரர்களுக்காக தாலி கட்டுவதற்கு முன் தமிழக தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி செயல்!!

ராணுவ வீரர்களுக்காக

the2

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தற்கொலைபடை தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களுக்கு அஞ்சலித்து செலுத்தும் விதமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பொதுமக்கள் பலரும் ஆங்காங்கே பதாகைகளை வைத்துள்ளனர்.

the1

இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஹரிஹரன்(25) என்பவருக்கும், அனுமோனிஷா (23) என்பவருக்கும் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருமண மணடபத்தில் திருமணம் நடைபெற்றது.

wedddd

திருமணத்திற்கு முன்பாக மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய தம்பதியினர், அதன் பிறகு மேடைக்கு அருகில் அமர்ந்தவாறே

W4-3

ரத்ததானம் செய்தனர். இதனை பார்த்து நெகிழ்ந்து போன உறவினர்கள் பலரும் ரத்ததானம் செய்ய முன்வந்தனர். இந்த விழாவின் போது 35 பேர் வரை ரத்ததானம் செய்ததாக திருமண தம்பதியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *