பள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை… தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்!

பள்ளி வளாகத்தில்

dethte

கடலூர் அருகே பள்ளி வளாகத்தில் வைத்து ஆசிரியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச்

murder2

சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் ரம்யா. இவர் அங்குள்ள காயத்ரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரை அவரது வீட்டுக்கு அருகே வசித்து வந்த ராஜசேகர் என்ற நபர் ஒரு தலையாக

deth-body-d1mdv5j8e

காதலித்ததாக கூறப்படுகிறது. ராஜசேகர் கடந்த 6 மாதங்களுக்கு முன் ரம்யா வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார்.  ஆனால் ரம்யாவும் அவரது குடும்பத்தினரும் அதனை ஏற்க மறுத்தவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால்

deth

ஏற்பட்ட பிரச்சனைகளை அடுத்து ரம்யா மீது ராஜசேகர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் ரம்யா பணியாற்றும் பள்ளிக்கு சென்ற ராஜசேகர் வகுப்பறையில் இருந்த ரம்யாவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில்

death-545dde

சரிந்து ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் மாணவர்களும், சக ஆசிரியர்களும் அலறியடித்து ஓடினர். இதையடுத்து அந்த இடத்தில் இருந்து ராஜசேகர் தப்பியோடினார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு

dethte

விரைந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை ரம்யா படுகொலை காரணமாக காயத்ரி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *