இந்த வார ராசி பலன்கள் – மேஷம் (24-02-19 முதல் 30-02-19 வரை )

மேஷம்

meshamjpg

நடப்பவை நன்மைக்கே என்று நினைத்து நல்லதே நினைத்து செயல்படும் மேஷ ராசிக்காரர்களே… இந்த வாரம் கிரகங்களின் கூட்டணியும் இடப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

mesam

இந்த வாரம் தந்தைக்காரகன் சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இருந்தாலும் வார இறுதியில்

mesham-15-1481817027

சந்திராஷ்டமம் வருவதால் கவனம் தேவை. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபம் அதிகரிக்கும். வருமானமும்

Rameshwaram-5778_5

அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் வேகத்தை காட்டுவதை விட நிதானமாக இருக்கவும். புதன் உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் சூரியனுடன் கூட்டணியில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம்

tournaments

சிறப்படையும் 25ஆம் தேதிக்கு மேல் பன்னிரெண்டாமிடத்திற்கு மாறுவதால் தாய் மாமனுக்காக செலவழிக்க வேண்டியிருக்கும். குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் திடீரென்று பணம் கிடைக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில்

watermelon

இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். 24ஆம் தேதிக்கு மேல் 10ஆம் வீட்டிற்கு மாறுகிறார் ஆடம்பரப் பொருட்கள் வியாபாரம் சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வியில் மிகவும் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை

discussion-argument

பராமரித்து சரி செய்து கொள்ளவும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு இது வெற்றிகரமான வாரம் வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினால் தேர்வினை பயமின்றி எழுதலாம். ராசியான நாட்கள் செவ்வாய், வெள்ளி. ராசியான நிறங்கள் நீலம், இளம் பச்சை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *