நோயே இல்லாமல் 100 ஆண்டுகள் வாழ வேண்டுமா? இதில் மூன்றை மட்டும் சாப்பிடுங்க போதும்!

நோயே இல்லாமல்

nn5

சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமானதா? இல்லையா? என அதில் உள்ள சத்துக்கள்தான் நிர்ணயிக்கின்றன. சோடியம் – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உடலில் அமிலத்தின் அளவை சீராக வைக்கவும் உதவுகிறது. ஆனால்

nn1

இதனை அதிகளவில் எடுத்துக்கொள்ளக்கூடாது. உப்பு, ஊறுகாய், மோர், தர்பூசணி போன்றவற்றில் அதிகம் உள்ளது. பொட்டாசியம் – உடலுக்கு தேவையான புரோட்டின்களை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு

nn2

கார்போஹைட்ரேட்டையும் சரியான அளவில் கிடைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு பொட்டாசியம் அவசியமானது. உருளைக்கிழங்கு, தக்காளி, ப்ரோக்கோலி, ஆரஞ்சு போன்றவற்றில் அதிகம் உள்ளது. பாஸ்பரஸ் – செரிமானம் சீராக இருக்க பாஸ்பரஸ்தான் முக்கியமானது. உடலில் ஹார்மோன்கள்

nn3

சமநிலை அடையவும், எலும்புகள் வலிமையடையவும் உதவுகிறது பீன்ஸ், சோளம், பீனட் பட்டர் போன்றவற்றில் அதிகம் உள்ளது. ஜிங்க் – நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பெண்கள் கருத்தரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. முந்திரி, சுண்டல், பட்டாணி, சிக்கன் போன்றவற்றில்

nn4

அதிகம் உள்ளது. மக்னீசியம் – உடலுக்கு தேவையான குளுக்கோஸ் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தையும், சீரான இதய ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை தடுப்பதோடு இன்சுலின் அளவையும்

nn6

சீராக்குகிறது. சாக்லேட், முந்திரி, பாதாம் போன்றவற்றில் அதிகம் உள்ளது. இரும்புச்சத்து – ஹீமோக்ளோபினின் அளவில் முக்கியப்பங்கு வகிக்கிறது, இரத்தத்தில் இருந்து நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குவதும் இதுதான். இரும்புச்சத்து குறைவது இரத்தசோகை, இரத்த இழப்பு

nn4

போன்றவற்றை ஏற்படுத்தும். சுண்டல், பூசணி விதைகள், எள், திராட்சை போன்றவற்றில் அதிகம் உள்ளது. அயோடின் – தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிற்கு அவசியமானது. அயோடின் அளவு குறையும்போது சோர்வு, மனஅழுத்தம் உயர் கொழுப்பு

nn5

போன்றவை ஏற்படும். தைராய்டு பிரச்சினையையும் ஏற்படுத்தும். இறால், உப்பு, வேகவைத்த முட்டை, ஸ்ட்ராபெரி, தயிர் போன்றவற்றில் அதிகம் உள்ளது. காப்பர் – திசுக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான கொலாஜன் உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதயத்தின் ஆரோக்கியத்திற்கும்

nn6

சீரான இதயத்துடிப்பிற்கும் அவசியமானது. காளான், முந்திரி, அவோகேடா, பீன்ஸ் போன்றவற்றில் அதிகம் உள்ளது. கோபால்ட் – வைட்டமின் பி12-ன் முக்கிய பகுதியான இது கோபால்மின் எனப்படுகிறது. உடலின் சீரான இயக்கத்திற்கு

nn2

சிறிதளவு கோபால்ட் மட்டும் அவசியம். முட்டை, பால், இறைச்சி, ப்ரோக்கோலி, கீரை போன்றவற்றில் உள்ளது. கால்சியம் – எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. கால்சியத்தின் அளவு குறைந்தால் எலும்புருக்கி நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. பால், சீஸ், தயிர், கீரை, சுண்டலில் அதிகம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *