Friday, January 20, 2017

ஒரு கிரிக்கெட் வீரருக்கு ஒரு ஓட்டத்திற்கு 56,000 ரூபாவா? பணம் செலுத்துவது யார்?

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தோல்வியடையும் வீரர்களுக்கு செலுத்தும் தொகையை அறிந்தால் அவர் ஆட்டமிழந்து வரும் போது விளையாட்டு ரசிகர்கள் கல்லெறியவும் தயங்கமாட்டார்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம்,ஒரு வீரருக்கு ஒரு ஓட்டத்திற்கு 56 ஆயிரம் ரூபா வீதம் 57 மில்லியன் பணத்தை ஒருவருக்கு கொடுத்துள்ளது, மற்றுமொருவர் ஒரு ஓட்டத்திற்கு 26 ஆயிரம் என்ற கணக்கில் 73 மில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளார் என தயாசிறி ஜயசேகர தகவல் வெளியிட்டுள்ளார்.

இதனால், தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களுக்கு திறமைகளின் அடிப்படையில் பணத்தை செலுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாகவும் இதனை தான் அங்கீகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள், தேசிய குழு உறுப்பினர்கள் தவிர ஏனையவர்கள் மற்றம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஒப்புதல் வழங்குபவர் ஆகியோருக்கு எதிராக இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.