Thursday, March 23, 2017

ஜெயலலிதா செய்த காரியத்தினால் ஒன்றிணைந்த சூர்யா – ஜோதிகா! இவர்கள் பற்றி தெரியாத சில இரகசியங்கள்…

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் நடிகைகள் பலர் உண்டு. அந்த வரிசையில் மக்களால் என்றுமே பொறாமைப்படும் அளவுக்கு பேசப்பட்ட நட்சத்திர ஜோடி சூர்யா ஜோதிகா தான்.

இவர்கள் திருமணம் நடக்க முக்கிய காரணமாக அமைந்தது மறைந்த முதலவர் ஜெயலலிதா என சூர்யா தற்போது கூறியுள்ளார்.

சூர்யா தன் காதல் பற்றி பெற்றோரிடம் பற்றி கூறுவதற்கு முன், ஜெயலலிதாவிடம் தான் முதன்முதலில் கூறினாராம். தன் தங்கை திருமணத்திற்கு ‘அம்மா’ வந்தபோது தான் இதனை சூர்யா கூறியுள்ளார்.

சூர்யா பெற்றோர்களிடம் காதலை பற்றி கூறியபோது அதற்கு அவரது வீட்டில் பல எதிர்ப்புகள் இருந்தது சிவகுமார் எளிதில் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, இதை அறிந்த ஜெயலலிதா, சிவகுமாரிடம் பேசி சூர்யா-ஜோதிகா திருமணம் நடக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

இவர்கள் பற்றி தெரியாத 8 இரகசியங்கள்…

ஜோதிகா வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். இவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. ஆரம்ப காலத்தில் தமிழ் கொஞ்சம், கொஞ்சம் கற்பித்தது சூர்யா தான். பிறகு திருமணத்திற்கு பிறகு, மாமியாரிடம் முழுமையாக தமிழ் கற்றுக்கொண்ட ஜோ, இப்போது தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் போல தமிழ் சரளமாக பேசுகிறார்.

சூர்யா ஜோதிகா பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். ஒரு ஷூட்டிங்கில் இருக்கும் போது சூர்யா தொடர் தோல்விகள் கண்டுள்ளார் என ஜோவுக்கு தெரியவந்தது. ஷூட்டிங் அருகில் மைதானத்தில் சூர்யா பயிற்சி செய்துக் கொண்டிருக்கிறார் என தெரியவர, தனது அசிஸ்டெண்ட்டை அனுப்பி, சூர்யாவிடம் பேச வேண்டும் என கேட்டுவர கூறினார். சூர்யா அதற்கு மறுக்கவே, நேரடியாக உடனே சென்று அவருடன் பேசி, தொடர்பு எண் வாங்கி திரும்பினார். இதற்கு பிறகு தான் இவர்கள் மத்தியில் காதல் மலர்ந்தது.

சூர்யா தொடர் தோல்வியால் துவண்டிருந்த காலக்கட்டத்தில். கவுதம் மேனன் காக்க, காக்க திரைக்கதை அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஜோ தான் நடிகை என்று தீர்மானம் ஆகியிருந்தது.

திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் செல்வதாக தான் முன் திட்டம் இருந்துள்ளது. ஆனால், ஜோ திருமணத்திற்கு பிறகு எல்லாரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக தான் இருக்க வேண்டும் என விரும்பியுள்ளார்.

சூர்யா – ஜோவிற்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் தேவ் வளர்ப்பு ஜோவின் கடமை என்றும், தியாவை வளர்ப்பது சூரியாவின் கடமை என்றும் இருவரும் ஒரு கோட்பாடு வைத்துள்ளனர். குழந்தைகள் பிறந்த பிறகு ஜோ நடிக்க மறுத்த காரணம், சிறந்த நடிகையாக இருப்பதை காட்டிலும், சிறந்த தாயாக இருக்க வேண்டும் என அவர் விரும்பியது தான்.

ரத்த சரித்திரம் படத்தில் முதலில் இந்தி தெரியாது என நடிக்க மறுத்தார் சூர்யா. பிறகு ஜோ தான் சூர்யாவிற்கு குறுகிய காலத்தில் இந்தி கற்பித்து, அவரை சரளமாக இந்தி பேச வைத்தார். இந்த காலத்தில் ஒரு இந்தி வாத்தியாரும் சூர்யாவிற்கு இந்தி கற்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோவின் ராசிக்கல்லானது ஓபல் எனப்படும் ஒருவகையான அரிய மாணிக்கக்கல். திருமணம் முடிந்து சூர்யா – ஜோ வெனிஸ், இத்தாலி சுற்றுபயணம் மேற்கொண்ட போது அவர்கள் ஓபல் மாணிக்க கல்லை பார்த்தனர். ஆனால், வாங்கவில்லை. ஊர் திரும்பிய பிறகு அதே போன்ற கல்லை வாங்கி ஜோவிற்கு பரிசளித்து ஆச்சரியப்படுத்தினார் சூர்யா.

அனைவருக்கும் ஏதாவது ஒரு உணவு அல்லது பானத்தின் மீது அதீத பிரியம் இருக்கும். ஜோவிற்கு கேப் காபி டே மீது அதிக விருப்பம். ஸ்ட்ராங் காபி குடிப்பது என்றால் ஜோவிற்கு அதிகம் பிடிக்கும்.