Friday, January 20, 2017

ஜெ . படுக்கையறைக்குள் நுழைய பயப்படும் சசிகலா..! விரைவில் போயசில் பிரமாண்ட பூஜை?

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அதிமுக பொதுசெயலாளராக பதவி ஏற்றுள்ளார். மேலும் அவர் போயஸ் கார்டனில் ஜெயலலிதா பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் பயன்படுத்தி வருகிறார். பொதுசெயலாளராக பதவி ஏற்க வந்தபோது ஜெயலலிதாவின் காரில் அமர்ந்து வந்து ஆச்சரியப்படுத்தினார்.

அதே போல ஜெயலலிதாவின் நடை, உடை பாவனைகளையும் பின்பற்றி வருகிறார். மேலும் ஜெயலலிதாவை போலவே தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக மெதுவாகவே கைகூப்பியபடி நடந்து வருகிறார்.

அந்த அளவுக்கு ஜெயலலிதாவாக மாறி வரும் சசிகலா அவர் பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் பயன்படுத்தி வருகிறார். அதே போல ஜெயலலிதா தங்கியிருந்த போயஸ் இல்லத்தில்தான் அவர் தங்கி இருக்கிறார். அவரின் அனைத்து பொருட்களையும் பயன்படுத்தி வருகிறார்.

ஆனால் ஜெயலலிதா பயன்படுத்திய படுக்கை அறையை மட்டும் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறார். அங்கே படுத்தாலும் நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்து வருகிறார். மேலும் ஏதாவது தொந்தரவு ஏற்படுமோ என பீதி அடைந்து வருகிறார்.

எனவே போயஸ் தோட்டத்தில் விரைவில் பிரமாண்ட பூஜை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக கேரள ஜோதிடரை அழைத்து வரும் பணியில் மன்னார்குடி தரப்பு பிசியாக உள்ளதாம்.