Thursday, March 23, 2017

கிளிநொச்சி அக்கரையான் மகாவித்தியாலயத்தில் நடப்பது என்ன?-Photos

கிளிநொச்சி அக்கரையான் மகாவித்தியாலயம் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர்களிற்கு உரிய தளபாட வசதிகள் போதாமல் இருப்பதாகவும் வகுப்பறை கட்டிடங்கள் சில மீள் திருத்தம் செய்ய வேண்டிய நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாடசாலையின் நீர்த்தாங்கி அமைப்பதற்காக பெறப்பட்ட அரச நிதி சிலரால் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் உரிய முறையில் குறித்த புணரமைப்பு பணி இடம்பெறவில்லை எனவும் பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Image may contain: sky, tree, plant and outdoor

Image may contain: sky, plant, tree and outdoor

Image may contain: sky, house, cloud and outdoor

Image may contain: sky, outdoor and nature