Friday, January 20, 2017

சற்றுமுன் வவுனியாவில் இளைஞன் கொடூரமாக அடித்து கொலை!

வவுனியா தேக்கவத்தை மயானத்துக்கருகில் கானப்படும் அம்மன் கோவில் அருகாமையில் வாடகைக்கு தனது பாட்டியுடன் வாழ்ந்து வந்த 25வயதான பாலரஞ்சன் பாலநிசாந்தன் என்கின்ற இளைஞனே இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்

இவரது பெற்றோர் வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் மனைவி நையினாதீவில் வசிப்பதாகவும் அறியப்படுகிறது

இவர் குடியிருந்த வீட்டிற்கு முன்பாக இருந்த மற்றுமொரு இல்லத்தில் வைத்தே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பொலிஸார் சம்பவ இடத்தில் தற்சமயம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்